யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள்?: பேராயர் கேள்வி

Date:

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள் என்று தலைவர்களிடம் கேட்கிறேன்.

ஆட்சியாளர்களின் சுதந்திரத்தையா? அல்லது மக்களின் சுதந்திரத்தையா? வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வருகின்றனர்.

பிரபுக்கள் முன்னிலையில் பட்டினியல் இருக்கும் மக்களை அவமானப்படுத்துவது சுதந்திரமா?அழகான எமது தாய் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டம்.

அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்த நாட்டை மீட்க வேண்டும்.சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...