ஆலிமா ஜெர்னலிஸம்: முதல் செயலமர்வு மள்வானையில்…!

Date:

ஷரீஆத்துறை மாணவிகளுக்கான ஆலிமா ஜெர்னலிஸம் மூன்று நாள் செயலமர்வு மள்வானை அல் இமாம்அப்துல் அஸீஸ் பின்பாஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

முதலாம் நாள் ஆரம்ப விரிவுரையை நிகழ்த்திய நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் தூய இலங்கையை கட்டியெழுப்ப ஊடகத்துறையின் பயன்பாடு தொடர்பாக விளக்கினார்.
இதனையடுத்து விரிவுரை நிகழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ரிப்தி அலி தகவல் அறியும் சட்டமும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இரண்டாம் நாள் உரை நிகழ்த்திய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சஹாப்தீன் மக்களுக்கு தஃவாப் பணிகளை முன்னெடுக்க கைபேசி ஊடகத்தை படபயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தார்.

மூன்றாம் நாள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தஃவாப் பணியை முன்னெடுப்பது தொடர்பாக தகவல் திணைக்கத்தின் சிரேஷ்ட தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா விளக்கமளித்ததுடன் எதிர்கால சமுதயாத்துக்கு சன்மார்க்க விளக்கங்களை வழங்க இந்த நுட்பம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும்  செயல் ரீதியாக செய்து காட்டினார்.

இந்த மூன்று நாள் கருத்தரங்கை பஹன அகடமிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத் நெறிப்படுத்தினார்.

இதனையடுத்து இறுதிநாள் இறுதி அமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கல்லூரியின் அதிபர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...