இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் சண்டை தீவிரம்: 3.3 இலட்சம் இஸ்ரேலியர்கள் இடப்பெயர்வு

Date:

இஸ்ரேல் – ஹெஸ்புலா சண்டை தீவிரம் – 3.3 இலட்சம் இஸ்ரேலியர்கள் இடப்பெயர்வு
27 மார்ச் 2024

மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாஹ்– இஸ்ரேல் இராணுவம் இடையேயான சண்டை தீவிரம் அடைந்துள்ளது.

ஹமாஸுக்கு துணை நிற்கும் விதமாக இரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாஹ், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் வசித்த சுமார் 3,30,000 இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளை விட்டு  இடம்பெயர்ந்துள்ளனர். தீவிரமான சண்டை லெபனான் எல்லையின் இருபுறமும் உள்ள நகரங்களை காலி செய்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலியர் ஒருவர் கூறுகையில்,

20 வருடங்கள் அமைதியாக இருந்தது. நிச்சயமற்ற நிலையும் இருந்தது. எதிரிகள் இடையே என்ன நடக்கிறது. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள்? என தெரியவில்லை. இந்த சமயத்தில் அவர்கள் வளர்ந்துவிட்டனர். அமைதியாக வாழ பழகிவிட்டோம். ஆனால் தற்போது அவர்களை இங்கிருந்து தூரமாக தள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

கிர்யத் ஷ்மோனா குடியிருப்புவாசிகளை போலவே எங்களிடம் வலுவான ராணுவம் உள்ளது. செல்வதற்கு ஒரு இடமும் இல்லை. நான் எங்கே போவேன்? இங்குதான் எனக்கு வேலை இருக்கிறது. எல்லாமே அருகில் இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்  கூறினார்.
மூலம்: BBC

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...