குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை!

Date:

நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம். அதேபோன்ற மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலம் இதனை கணக்கிட்டு, 20 கிலோ அரிசியை வெளிப்படையாக வழங்குவோம்.

28 இலட்சம் குடும்பங்களுக்கும் இரண்டு கட்டங்களாக இதனை வழங்க உள்ளோம். ஏப்ரல் மாதம் 10 கிலோவும் மே மாதம் 10 கிலோ வங்க எதிர்பார்க்கின்றோம். சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 10 கிலோ அரசியை வழங்கவுள்ளோம்.
இது அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும்.

விவசாயிகளுக்கு இதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கும் விலையை உயர்த்துவது மறுபுறம் சிறிய மற்றும் நடுத்தர மில் உரிமையாளருக்கு வருமானம் ஈட்ட இது ஒரு சந்தர்பமாக அமையும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...