சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று !

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்றும், நாளையும் இதற்கான விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன், நாளை மாலை 4.30க்கு சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அண்மையில் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளன.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பக்கச்சார்பற்ற முறையில் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர், அந்த பதவிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளன.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...