பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் வழங்கப்படும்

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான சூழல் தற்போது தயாராகியுள்ளது. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல ஒரு முறைமை தயாராகி வருகிறது. அண்மைய காலமாக காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

விவசாய அமைச்சு என்ற வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் புரதத் தேவைக்காக இறைச்சி மற்றும் முட்டைகளை உற்பத்தி செய்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...