இலங்கையர்கள் புகைபிடிப்பதற்காக நாளாந்தம் 520 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர்!

Date:

புகையிலை பாவனையால் தினமும் 50 பேர் உயிரிழப்பதாக  மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில் புகைபிடித்தல் ஒன்று என  அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையர்கள் புகைபிடிப்பதற்காக நாளாந்தம் 520 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் மக்களின் சிகரட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ள நிலையில் இன்னும் 1.5 மில்லியன் மக்கள் சிகரட்டை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக பல மாற்றங்களுக்கான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டும் அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாக சம்பத் டி சேரம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...