இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளது.
இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டிற்கு பெறப்பட்டது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்குகளை கொண்டு வரும்போது அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இந்த வரிக்குதிரைக்கும் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதாலேயே உயிரிழந்திருக்க கூடும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையில் மிகவும் அரிதாக வாழும் உயிரினங்களில் வரிக்குதிரையும் ஒன்றும். வரிக்குதிரையின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க கடந்த காலத்தில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில்தான் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வரிக்குதிரைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதால் எதிர்காலத்தில் வரிக்குதிரை இனம் இலங்கையில் அழிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.