ஒரு குழந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Date:

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 2 பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (08) சில நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கியவர்கள் பிரதேசவாசிகளால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு உயிலங்குளம் திருக்கதீஸ்வரம் பாலாவி ஏரியில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிலங்குளம் திருக்கேஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவைக் காண மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய...

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...