வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கடந்த 22ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) நேற்று அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் அவர் இன்று (25) வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவரை கைது செய்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
“இதுவரை காலம் உண்மை வெளிகொணரப்படாமைக்கான காரணம் என்ன”? என்று கேள்வி எழுப்பட்ட நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே இந்த தகவலை அறிவித்ததாக மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.