கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரும் விலகினார்!

Date:

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துவருகின்றனர்.

இந்நிலையிலேயே, கோப் குழுவில் பணியாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவை தெரிவுக்குழு பரிந்துரைத்ததாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்பேது, எழுந்து உரையாற்றிய வசந்த யாப்பா பண்டார, தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்ததோடு, விரைவில் பதவி விலகலை எழுத்துபூர்வமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களில் அடங்குவர்.

கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்தே இவ்வாறு உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...