தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதேநேரம், இந்த முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.