தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் ஆதரவு: கருத்து கணிப்பில் தொடர்ந்தும் முன்னிலை

Date:

தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் விருப்பு தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் (IHP) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதம் பாரியளவு மாற்றங்கள் எதுவும் கண்டறியப்படாமலே தொடர்கின்றது.

இதன்படி, 53 வீத அங்கீகாரத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 34 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 6 வீதமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 7 வீதமும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16,248 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் தரவுகளை பயன்படுத்தி இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...