புறப்பட்ட 40 நிமிடங்களின் பின் மீண்டும் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

Date:

இந்தியாவின் பெங்களூர் நோக்கி நேற்று (19) அதிகாலை பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 173 என்ற விமானம் நேற்று அதிகாலை 1.10 அளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

எனினும் விமானத்தின் சமநிலையை பராமரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களின் பின்னர் அது கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஏனைய மாற்று விமானங்களின் ஊடாக குறித்த 85 பேரும் பெங்களூர் நோக்கி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...