மாணவர்களை தும்புத்தடியால் சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர் – மூவர் வைத்தியசாலையில்!

Date:

பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரால் தும்புத்தடியால் தாக்கப்பட்டதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரால் ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும், பாடசாலை நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றதாக கூறி குறித்த மாணவர்களை வகுப்பு ஆசிரியர் தாக்கியதாக பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...