ரமழான் நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Date:

ரமழான் மாதத்தை முன்னிட்டு நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழ்நாடு அரசால் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024-ஆம் ஆண்டிலும் ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2024-ஆம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் நியமனம்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக டபிள்யூ.ஏ.சூலானந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் நிர்வாக சேவைகளில் சிறப்பு...

விடைபெற்றுச் செல்லும் முன்னாள் பணிப்பாளருக்கு சர்வமதத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம்

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல்...

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார...

பரீட்சை நிலையத்திலிருந்து காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

க.பொ.த (சா/த) பரீட்சை முடிந்து செவ்வாய்க்கிழமை (14) நாவலப்பிட்டியில் காணாமல் போன...