வரவிருக்கும் தேர்தல்தான் எனது கடைசி தேர்தல்: துருக்கி ஜனாதிபதி

Date:

மேற்காசிய நாடான துருக்கியில், கடந்த 2014லிருந்து தற்போது வரை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர், 70 வயதாகும் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan)

2023 மே மாதம், அப்போதைய தேர்தலில் வந்த முடிவுகளின்படி 2-ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றார். துருக்கியின் 12-வது ஜனாதிபதியாக தனது 5-வருட பதவிக்காலத்தில் உள்ளார் எர்டோகன்.

இம்மாத இறுதியில், துருக்கியில் பிராந்திய மற்றும் முனிசிபாலிட்டி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மேயர்களும், கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்நிலையில், 2 தசாப்தங்களுக்கும் மேல் பதவியில் இருந்த எர்டோகன், மார்ச் தேர்தல்களை தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.

2003ல் இருந்து 2014 வரை துருக்கியின் பிரதமராகவும், 1994லிருந்து 1998 வரை இஸ்தான்புல் (Istanbul) நகர மேயராகவும் இருந்த எர்டோகன், அரசியலில் இருந்து  விலகுவது குறித்து தற்போதுதான் முதல்முறையாக பேசியுள்ளார்.

எர்டோகன் இது குறித்து தெரிவித்ததாவது,

இது எனது கடைசி தேர்தல் என்பதால், நான் ஒய்வின்றி உழைத்து வருகிறேன்.சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தின்படி இதுதான் எனது இறுதி தேர்தல்.

நான் பதவி விலகினாலும் எனது “நீதி மற்றும் வளர்ச்சி கட்சி” அதிகாரத்தில் இருக்கும். வரும் மார்ச் 31 அன்று நடைபெற உள்ள தேர்தலின் முடிவுகள் எனக்கு பிறகு வரும் சகோதரர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து விட்டோம்.

இவ்வாறு எர்டோகன் கூறினார். ஆனால், எர்டோகனின் இந்த அறிவிப்பை நம்ப முடியாது என அவரை சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...