அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை: சுகாதார அமைச்சின் அதிர்ச்சித் தகவல்

Date:

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

தேசிய உள்நாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 – 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது.

எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

 

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...