இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

Date:

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் கடந்த இரு மாதங்களில் 1651 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இன்று (26) இடம்பெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மூலம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...