உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: மெதகம தம்மானந்த தேரர்!

Date:

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக தமது பீடத்தினருடன் விரிவாக ஆராய்ந்த பின்னரே தமது கருத்துக்களை வெளியிட முடியுமென அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தினால் கடந்த மாதம் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து அவ்விரு பீடங்களும் இணைந்து அச்சட்டமூலத்தை ஆராய்ந்து, தமது நிலைப்பாடுகளை அறியத்தருவதாக மல்வத்துபீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியபீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய மகாவிகாரை சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இந்த உத்தேச சட்டமூலமானது நல்லிணக்கப்பொறிமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...