சிறுவர்களுக்கு வழங்கிய வாகனத்தில் நீதிமன்றம் சென்ற கெஹலிய: புதிய சர்ச்சை!

Date:

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சிறுவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனத்தில் நீதிமன்ற நடவடிக்கைக்குச் சென்றதாக  சர்ச்சை கருத்து வெளியாகியுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலியவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வாகனத்தில் குழந்தைகளை தவிர கைதிகளை ஏற்றி சொல்ல கூடாது என்பதோடு, வாகனத்தை சிறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறை ஆணையாளரும் இந்த நிபந்தனையை மீறியுள்ளதாகத் தெரிவித்து, இரகசிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...