தேசிய ரீதியாக நடத்தப்பட்ட கைத்தொழில், விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு பதக்கங்கள்!

Date:

கைத்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறந்த முயற்சியாளர் கழகங்களுக்கிடையிலான கைத்தொழில்,விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையின் மாணவிகள் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வெற்றி கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வின் சித்திர போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 4 மாணவிகள் பங்கேற்றதுடன் அந்த 4 சித்திரங்களும் இன்றைய நிகழ்வில் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

பல பாடசாலைகளுக்கு மத்தியில் வட மேல் மாகாணத்தில் இருந்து தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலை என்ற பெருமையையும் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்விற்கு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபரான எஸ். எப். சாஜினாஸ் மற்றும் நஸ்ரின் ஆசிரியை சகிதம் இப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...