இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்!

Date:

இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் முறையின் மூலம் பெருமளவானோர் தொழில் வாய்ப்புகளை பெற்றனர்.

இந்த நிலையில், இந்த முறைமை செயற்படுத்தப்படாமை காரணமாக, ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த விசேட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மீண்டும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக, இரு நாட்டு போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...