நாட்டில் நிலவும் வறண்ட காலநிலையில் நாளைய தினம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் நாளை மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.