இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Date:

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த நடுத்தர வருமானம் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை , வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சத்தாலும் , அடுத்த ஆண்டு மூன்று இலட்சத்தாலும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...