இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு!

Date:

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உழைக்கின்ற இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸில் இன்று இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இப்தார் நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் உட்பட ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸின் மசூறா சபை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் முஸ்லிம் சமய கயலாசார தினைக்களம், ஸ்ரீலங்கா ஹஜ் கமிட்டி, வக்பு சபை, தரீக்காக்களின் சுப்ரிம் கவுன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை சூபி ஆன்மிக பேரவை, அகில இலங்கை தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் தப்லிக் ஜமாஅத் சூறா சபைக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...