ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்: கழுகுப் பார்வையில் உலக நாடுகள்

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோர் பிரதமர் இல்லத்தில் சந்திப்பார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் மற்றும் பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...