ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

Date:

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடத்தப்படவுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை குறித்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 வரை பாராளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளைய தினம் சபை நடவடிக்கைகள் முற்பகல் 9.30 அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...