ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

Date:

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 139 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காணியுடன் கூடிய புதிய வீடு கட்டுதல் மற்றும் வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா கட்டுவாபிட்டிய தேவாலயத்துடன் தொடர்புடைய 144 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவாலயங்கள் தொடர்பான வீடமைப்பு திட்டத்திற்காக 90.855 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொச்சிக்கடை தேவாலயத்துடன் தொடர்புடைய 9 குடும்பங்களுக்கு வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகளுக்கு 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...