பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில்,வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டம்!

Date:

அமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள், வோஷிங்டனில் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கருகில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசா யுத்தத்தில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் அமெரிக்காவுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி, வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களில் கூடாரங்கள் அமைத்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

வெள்ளை மாளிகைக்கும் இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 அம் திகதி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது.

6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...