பாலித தெவரப்பெருமவின் உடல் நாளை நல்லடக்கம்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், நாளை மதுகம கரம்பேதர பகுதியில் இடம்பெறவுள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

பிரேதபரிசோனையை அடுத்து, அன்னாரின் உடல், அவரது உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது உடல் அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அன்னாரின் மறையையொட்டி, அவரது பிரதேசத்தின் பல இடங்களில் மரண அறிவித்தல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதோடு, வெள்ளைக் கொடிகளையும் பறக்கவிட்டு, பொது மக்களின் தங்களின் சோகத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இன- மத- மொழி பேதம் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியாக கருதப்பட்ட பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், நாளை மதுகம- கரம்பேதர பகுதியில் இடம்பெறவுள்ளன.

தனது இறுதிக் கிரியைகளுக்காக தானே அமைத்துக் கொண்ட மயானத்திலேயே, நாளைய தினம் அன்னாரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்ச்சியாக அன்னாருக்கு பெருமலவிலான பொது மக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...