இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...