வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது விழுந்த மரம்!

Date:

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு (05)  நானுஓயா பிரதான நகர் நோக்கி  பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளாசோ பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியோரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றினை சட்ட விரோதமாக வெற்றி கொண்டிருந்த வேளையில் திடீரென மரம் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது வீழ்ந்தமையால் குறித்த விபத்துச் சம்பவம்  நேர்ந்துள்ளது.

எனினும் குறித்த மரத்தினை வெட்டியது யார் என்று தெரியாத நிலையில் சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தினால் சற்று நேரம் இவ் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...