இன்று முதல் புத்தாண்டு காலத்திற்கான விசேட பஸ் சேவை மற்றும் ரயில் சேவைகள்!

Date:

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான விசேட பஸ் சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பஸ் சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் 200 மேலதிக பஸ்கள் சேவையில் பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சேவையின் கீழ் நாளாந்தம் சுமார் 12 விசேட ரயில் பயணங்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 15 ஆம் திகதி வரை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...