கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை சட்டமூலத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளை மையப்படுத்தி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தன.

இருப்பினும், வெளியிடப்பட்ட சட்டமூலத்தின் சிங்கள மொழி பிரதியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அமைச்சரவை அண்மையில் அதற்கு அனுமதி வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...