காத்தான்குடி பிஸ்மி இளைஞர் கழகத்தினால் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வறுமையான குடும்பங்களுக்குரிய புதிய ஆடைகளை இலவசமாக வழங்கும் வேலை திட்டம் இந்த முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வறுமையான 50 குடும்பங்களுக்கு இந்த புதிய ஆடைகளை வழங்கும் நிகழ்வு (3) காத்தான்குடி பிஸ்மி இடைநிலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தவிசாளருமான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்களின் வழி நடாத்தலிலும் ஆலோசனையிலும் அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நழீமிஅவர்களின் தலைமையில் இந்த புதிய ஆடைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உரிய பயனாளிகள் நேரடியாக வந்து அவர்களே ஆடைகளை தெரிவு செய்து எடுத்துச் சென்றனர்
இந்த முறை முழுமையாக புதிய ஆடைகள் வழங்கப்படுவதுடன் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாக இதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரி நழீமி தெரிவித்தார்.

இது தவிர இந்த ஆடைகள் கிடைக்கப் பெறாத சில குடும்பங்களுக்கு 2500 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மகத்தான பணியுடன் பிஸ்மி இடை நிலை பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அன்பளிப்புச் செய்த 800 கிலோ அரிசியும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் பிஸ்மி இளைஞர் கழக உறுப்பினர்கள் பிஸ்மி இடை நிலை பாடசாலை விரிவுரையாளர்கள் அதன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.