சஜித்-அனுர விவாதம்: விவாத திகதியை நிராகரித்த சஜித்: புதிய திகதி அறிவிப்பு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

அடுத்த மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவும் நேற்றைய தினமே பதிலளித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு பதிலளித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி, இரு கட்சிகளின் பொருளாதார கலந்துரையாடல்களுக்கு முன்னர் பொது விவாதம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பொது விவாதங்களுக்கான திகதிகளாக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி அறிவித்த திகதிகளுடன் குறித்த தினங்கள் பொருந்தாதுள்ளன.

இரு கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்திற்கு மாத்திரமே திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, பொருளாதார வல்லுநர்களுக்கிடையிலான விவாதத்திற்கு திகதிகள் முன்மொழியப்படாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...