சர்வதேச அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Date:

கடந்த 45 வருடங்களாக  அனுஷ்டிக்கப்பட்டு வரும் “பைத்துல் முகத்தஸ்” தினம் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமையான இன்று (05)  புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது பலஸ்தீனுக்கு ஆதரவாக பொது மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

சமூக ஆர்வலர் இப்லால் அமீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

பெருமளவிலான பொலிஸார் பெரிய பள்ளிக்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்ட பேரணிக்கும் ஒலி பெருக்கி பாவனைக்கும் பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

இறுதியாக டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், இப்லால் அமீன் ஆகியோரது உணர்வு பூர்வமாக உரையினை தொடர்ந்து அமைதியான இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...