தனக்கு தானே கல்லறை அமைத்து கொண்ட பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று மாலை

Date:

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இதனடிப்படையில், அவரது பூதவுடல் மத்துகம யட்டதோலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தனக்காக தாமே தயாரித்த கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்தவண்ணமும் உள்ளனர்.

மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...