நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் இலங்கை பௌத்த, இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஐக்கிய அமைப்பான தர்ம சக்தி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் பொரளை பௌத்த இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் (04) இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு பூஜ்ய வண.கலாநிதி பல்லே கந்தே ரத்தினசார மகாநாயக்க தேரர் மற்றும் வண. கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி தேரர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்களும் முக்கியஸ்தர்கள் பல பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது,
1. தர்ம சக்தி அமைப்பிற்கு அடுத்த 03 வருடங்களுக்கான புதிய செயற்குழு நியமித்தல்
2. முன்னேற்ற அறிக்கை/ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தல்.
3. கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தல்.
4. அங்கத்தவர் கட்டணம் வசூலித்தல் .
5. எதிர்கால நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடுதல் என்பன இவ் இந்த வருடாந்த கூட்டத்தில் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றன.
சிறப்பான இந்நிகழ்வில் பொரளை இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவர் திஸாநாயக்க சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரத்தை விளக்கியதுடன், ஒரே இலங்கை என்ற கருத்தின்படி செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், இதற்கான அனைத்து மதத் தலைவர்களின் பொறுப்பையும் சுட்டிக் காட்டியதுடன், பௌத்த இளைஞர் அன்று முதல் இன்று வரை நாட்டின் இன ஐக்கியத்திற்காக பாடுபட்டதையும் விபரித்தார்.
தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024ஆம் ஆண்டில் ‘ஒரே இலங்கை’ என்ற தொனிப்பொருளில் மக்களை ஒன்று திரட்டும் திட்டத்தைக் கொண்டுள்ள தர்ம சக்தி அமைப்பின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட அருட்தந்தை அனுர பெரேரா அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.