பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

Date:

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம்...

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான்...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...