போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பாக அவசரமாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய இந் நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மருத்துவ சபையில் மருத்துவர்கள் பதிவு செய்திருக்க வேண்டுமென்பதுடன், மாகாண மட்டத்தில் தனியார் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
ஆயினும் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத பல மருத்துவர்களும் மருத்துவ நிறுவனங்களும் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாறான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தேடிக் கண்டுபிடித்து விசாரணை நடத்த மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பணித்த சுகாதார அமைச்சு, போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தது.
போலி மருத்துவர்கள் தொடர்பாக தம்மிடம் தகவல் வழங்க முடியுமென்றும் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.