ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிள் பேரணி!

Date:

“ரணிலுக்கு இடம் கொடுப்போம் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி” இன்று (27) காலை கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் ஆரம்பமானது.

நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பயணிக்கும் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு மாற்றப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தனவின் வழிகாட்டலின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தேசிய இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்களின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...