‘கருசரு’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

Date:

முறைசாரா தொழில் துறையில் பணிபுரிபவர்களை உள்வாங்கும் நோக்கில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கருசரு இணையத்தளத்தை தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (26) ஆரம்பித்து வைத்தார்.

இரத்தினபுரி முந்துவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் தேசிய வேலைத்திட்ட நிகழ்வின்போது  இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கருசரு இணையதளமானது முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள்  20  பிரிவினருக்கு திறக்கப்பட்டுள்ளது.

www.garusaru.lk என்ற இணையத்தின் மூலம் பதிவுசெய்தவுடன் தொழிலாளிகள் தனிப்பயனாக்கப்பட்ட QR குறியீட்டைப் பெறுவார்கள்.

இந்த 20 துறைகளில் பணிபுரிபவர்கள் தற்போது சமூக பாதுகாப்பு அமைப்பில்  பங்காளிக்கவில்லை . கருசரு திட்டமானது முச்சக்கர வண்டி ஓட்டுநர், கார் மெக்கானிக், கலைஞர், அழகுக்கலை நிபுணர், தச்சர், தச்சன், மேசன், மீனவர், பேக்கரி மற்றும் உணவு விநியோகத் தொழிலாளி, ஊடகவியலாளர், போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

“முறைசாரா தொழிலாளர்களை  தொழில் வல்லுநர்களாக அங்கீகரிக்க இந்த நாடு இன்னும் தயாராகவில்லை. தொழிலாளிகள் முறைசார் முறைசாரா என  வகைப்படுத்தப்பட்டிருக்கிறீரார்கள் . 1900 இல் தொழிலாளர் திணைக்களம்  அமைக்கப்பட்டாலும் , அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களைப்முறைசாராத தொழிலாளிகள்  தொழில் வல்லுநர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் புதிய வேலைவாய்ப்பு திருத்த சட்டத்தின் மூலம் முரசரத் தொழிலாளிகளுக்கு   கௌரவத்தை வழங்க முன்வந்துள்ளோம்.

எமது சட்டமூலத்தை  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். முரசரத் தொழிலாளிகள் தொழில்முறை சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்களது தொழில் கௌரவத்துக்கான சட்டத்தை ஏற்படுத்துவதன்  மூலம் விதிகள், நிபந்தனைகள் மற்றும் தகுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

எனவே, தரநிலைகள் நிறுவப்பட்டதும், உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அது நடைமுறைக்கு வந்தவுடன், வேலைவாய்ப்பிற்கு உரிமம் இருப்பது கட்டாயமாகிவிடும், இது முறைசாரா துறையில் தொழில்முறையின் மதிப்பை மேம்படுத்தும். இரு  வாரங்களில் இச்சட்ட மூலம்  அமைச்சரவையின் அனுமதிக்க சமர்ப்பிக்கப்படும்.” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விசா நடைமுறை குறித்து COPF குழுவில் விவாதம்!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

சட்டவிரோதமாக இயங்கும்  முகவர் நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில்   ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு!

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று...