10 பேருக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தால் விடுதலை பெறுவீர்கள்: இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்வியலின் அழகிய முன்மாதிரி

Date:

10 பேருக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தால் விடுதலை பெறுவீர்கள்: இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்வியலின் அழகிய முன்மாதிரி

இன்று உலக புத்தக தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகெங்கும் வாழும் மக்கள் மத்தியில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தகங்களை வாசிப்பதன் மூலமே மனிதனுடைய அறிவு நிறைவு பெறுகின்றது, சிந்தனை வளம் பெறுகின்றது, அவன் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்கின்றான். அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்கின்றான்.

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக தினத்துக்கான தலைப்பாக ‘உங்கள் பாதையில் வாசியுங்கள்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒவ்வொருவரும் தனக்குரிய பாதையை தெரிவுசெய்வதற்கு வாசிப்பு பிரதானமாகியிருக்கின்றது.

அந்த வகையில் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஆரம்ப காலத்திலே இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே நடந்த பல சம்பவங்களை வரலாற்றிலே பார்க்கின்றோம். .

இஸ்லாமிய வரலற்றிலே முதலாவது யுத்தமாக கருத்துப்படும் பத்ர் யுத்தத்திலேயே கைதிகளாக பிடிபட்டவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த சூழ்நிலையில் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கைதிகளை பார்த்து சென்ன விடயத்தைத்தான் இந்த புத்தக தினத்துக்கு முக்கியமான தலைப்பாக அமைத்திருக்கின்றோம்.

நீங்கள் 10 பேருக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தால் நீங்கள் பிரச்சினைகளில் இருந்த விடுதலை பெற்றுசெல்லலாம் என்பதே அந்த வார்த்தையாகும். உண்மையிலே எழுத வாசிக்க கற்றுக்கொள்வதன் மூலமே ஒரு மனிதன் புத்தகங்களை படிக்கவும் விளங்கவும் தகுதி பெறுகின்றான் .

எனவே அதற்கேற்ற வகையில் இறைத்தூதர் கைதிகளாக பிடிப்பட்டவர்கள் எந்தவிதமான தொந்தரவுகளுக்கும் ஆளாகமால் இருக்க நீங்கள் இவ்வாறான வேலையை செய்வீர்களானால் மதீனாவில் முஸ்லிம்களுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அதனை ஈடாக வைத்து நீங்கள் விடுதலை பெற்றுச் செல்லலாம் என அறிவிப்பை விடுத்ததன் மூலம் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் உன்னதமான நாகரீகத்தை கட்டியெழுப்புதவதற்கு முயற்சித்திருக்கின்றார்கள் என்பதை என்பதனை இதனூடாக புரிந்துக்கொள்ளகூடியதாக இருக்கிள்றது.

எனவே இத்தகைய முக்கியத்துவம் கொண்ட இந்த புத்தக தினத்தை நாம் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு முயற்சிப்போமாக.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...