ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

Date:

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  இடம்பெற்றுள்ளது

அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட இணக்கப்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...