உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி நியமிக்க முடியாது: இடைக்காலத் தடையுத்தரவு

Date:

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை விதித்து, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பு மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்திற்கெதிராக சட்டத்தரணி ஒருவரால் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, குறித்த மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...