ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேட அறிவிப்பு!

Date:

ஜனாதிபதி தேர்தலை செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் தீர்க்கமான அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவு பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 10 பில்லியன் ரூபாயாகும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...