துருக்கி ஜனாதிபதி- ஹமாஸ் தலைவர் சந்திப்பு: பல மணி நேரம் பேச்சுவார்த்தை

Date:

காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியா துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல் நகரில் பல மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.

இதன்போது  பலஸ்தீனர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

‘இந்த செயற்பாட்டில் பலஸ்தீனர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவது முக்கியமானதாகும்.

வெற்றிக்கான பாதை மற்றும் இஸ்ரேலுக்கு வலுவான பதில் கொடுப்பது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிலேயே தங்கியுள்ளது’ என்று எர்துவான் குறிப்பிட்டார்.

காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை துருக்கி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2011 தொடக்கம் துருக்கியில் ஹமாஸ் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதோடு ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் அங்கு அடிக்கடி பயணித்து வருகிறார்.

‘தையிப் அர்தூகானாகிய நான் மாத்திரமே இருந்தாலும் கூட, இறைவன் எனக்கு ஆயுளைத் தந்திருக்கும் வரையில் பலஸ்தீன போராட்டத்தை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களின் குரலாகவும் நான் தொடர்ந்து செயற்படுவேன்’ என்று அர்தூகான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...