பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை !

Date:

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்படும் என்றார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 அதிகாரி களும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு 25,000 அதிகாரி களும் தேவை என அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...